என்னுயிர் நீதானே...!

உனக்காக எழுதுகின்றேன் - என்
உள்ளத்து உணர்வுகளை
எத்தனை நாள்தான் மறைக்கமுடியும்
உறங்காத உண்மைகளை?
கவிதை எழுத காகிதம் எடுத்தால்
பேனாமை எழுதமுன்பு
எழுதி முடிக்கிறது - என்
கண்ணீர்த் துளிகள்
நீ பிரிந்த நொடிகளை...
உன் அன்பான பேச்சு
அழகான புன்னகை
என்னை அணுவணுவாய் கொல்கிறது
நீ மட்டும் எப்படி
இருக்கின்றாய் எனத் தெரியாமல்...
என்னை நீ மறக்கவில்லை
என்பதை நான் உணர்ந்தாலும்
நேற்றையப் பேச்சு பயமுறுத்துகின்றது
என் உயிரே
உனக்கு என்னானது என்று... இன்றுவரை தொலைபேசி
குறும் செய்தியும் இல்லை
அழைப்பும் இல்லை
பதறிச் சிதறி
உன் நண்பியைக் கேட்டால்
என் கதையைக் கேட்பதை விட
தெடர்பைத் துண்டிபதிலேயே
அவள் குறியாக இருந்தது
அவளும் உதவுவாள் என்ற
நம்பிக்கையும் இறந்து விட்டது...
நினைவுகளால் வடியும்
கண்ணீத்துளிகளை - என்
தலையணை துடைத்துக் கொண்டிருந்தாலும்
உன்னை இன்றே காணவேண்டும்
என்ற எண்ணத்தில்
என் கதவுவரைதான் ஓடமுடிகிறது...
அன்பே!
எங்கேயடி சென்றாய்?
என்ன செய்கிறாய்?
என்னாச்சு உனக்கு
இன்னும் என்னால்
அழமுடியவில்லை..
இன்றைய இரவு நித்திரையில் - என்
உயிர் பிரியமுன்பு
உன்னைப் பற்றிய செய்தியை அனுப்பு.
இருக்கும் போது நான்
அறியாத காதலை நீ
பிரிந்து போனபின்புதானடி புரிகிறது.
உன் பெயரை உச்சரித்து
உன் தொலைபேசிக்கு
அழைப்பு விடுத்து விடுத்து
சோர்ந்து போனேண்டி...
உன்னை நேரில் பார்த்திருந்தால்
இப்படி அழுதிருப்பேனோ தெரியவில்லை
ஒரு முறைகூட உன்னைப்
பார்க்க முடியவில்லையே அன்பே!
அன்று நீ அனுப்பிய அத்தனை
தொலைபேசிச் செய்திகளும்
என்னைக் கொல்லுதடி.
என் உயிர் நீதானேடி
உனக்காகத்தானே நான் வாழ்கின்றேன்.
என்னை இப்படி நீ
தவிக்க விட்டுச் சென்றது ஏனடி?
இன்றுடன் முடிவடையட்டும்
என் கவிதையின் பயணமும்
ஆயுளின் நீளமும்.
எப்போவாவது இந்தக் கவிதையை
நீ படிக்க நேர்ந்தால்
எனக்காக
ஒருதுளிக் கண்ணீரும் சிந்தாதே
இதுவரை நீ அழுதது போதும் அன்பே!
கவலைக் கடலில்
சுனாமி அலையாய்
என் மனம் பருதவிக்கிறது,
இன்னும் சில மணிநேரத்துக்குள்
உன்னோடு பேசாவிட்டால்
சுனாமி என்னையையும் அடித்துச் செல்லும்.
அன்பே!
என் ஆசைகள் எல்லாம்
உனக்குத் தெரியும்
அதை நீயாவது நிறைவேற்ற
உன் மகனுக்கு
காதல் துளிர்களின் ராஜ் எனப் பெயர்
வைத்து நல்லதொரு
காதல் கவிஞனாக்கி
என் ஆசைகளை
நீயாவது நிறைவேற்றுவாய்
என்ற நம்பிக்கையோடு
உன்னையும் என் காதலையும் விட்டு...
நீ உயிர்வைத்த
உன்மேல் உயிர் வைத்த ராஜ்
நெடுதூரம் பயணிக்க
முடிவுசெய்து விட்டேன்...
இக்கவிதை படித்து
என்னைத் தேடாதே அன்பே!
தேடினாலும் நான் கிடைக்கமாட்டேன்...
கவலைப் பட்டு
கண்ணீர் வடித்து
உன்னை நீ
கெடுத்துக்க வேண்டாம்
காரணம்
என்றும் என்னுயிர் நீதான்.